< Back
மாநில செய்திகள்
பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு
அரியலூர்
மாநில செய்திகள்

பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு

தினத்தந்தி
|
13 Aug 2023 1:39 AM IST

பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தது. அரியலூர் தாலுகாவிற்கு சிறுவளூர் கிராமத்திலும், உடையார்பாளையம் தாலுகாவில் வெண்மான்கொண்டானிலும் (கிழக்கு), செந்துறை தாலுகாவில் இரும்புலிக்குறிச்சியிலும், ஆண்டிமடம் தாலுகாவில் வரதராஜன்பேட்டையிலும் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்றன. கூட்டத்தினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்தினார்கள். இதில் கூட்டுறவு துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் அடுத்த பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி நடைபெறவுள்ளது. முகாம்கள் நடைபெறும் கிராமங்கள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

மேலும் செய்திகள்