< Back
மாநில செய்திகள்
ரூ.90 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

ரூ.90 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்

தினத்தந்தி
|
10 May 2023 12:37 AM IST

ரூ.90 லட்சத்தில் திட்ட பணிகளை மான்ராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.


ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் அயன்கரிசல்குளம் தார் சாலை ரூ.30 லட்சம் மதிப்பிலும், துலுக்கவெட்டி தார் சாலை ரூ.16 லட்சம் மதிப்பிலும், குளியல் தொட்டி போர்வெல் ரூ.4லட்சம் மதிப்பிலும், அரசபட்டி பைப் லைன் வேலைகள் ரூ.5 லட்சம் மதிப்பிலும், கான்சாபுரம், கூமா பட்டி மகாராஜபுரம், கோட்டையூர், பகுதியில் ரூ.25½ லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய திட்டப்பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பூமி பூஜை விழா மான்ராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. அவர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் வர்த்தக அணி செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் சேது, சுப்புராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்