< Back
மாநில செய்திகள்
ரூ.32¼ லட்சத்தில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

ரூ.32¼ லட்சத்தில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகள்

தினத்தந்தி
|
30 Jun 2023 11:58 PM IST

நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.32¼ லட்சத்தில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

அமைச்சர் திறந்து வைத்தார்

நெமிலியை அடுத்த சயனபுரம் ஊராட்சியில் உள்ள பழைய கண்டிகை கிராமத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ.13.21 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்துவைத்தார்.

தொடர்ந்து அசநெல்லிகுப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.19.20 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

நடமாடும் ரேஷன் கடை

பின்னர் நெல்வாய் ஊராட்சியில் உள்ள நெல்வாய் கண்டிகை கிராமத்தில் பள்ளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நடமாடும் ரேஷன் கடையை திறந்துவைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, துணைத்தலைவர் தீனதயாளன், நெமிலி தாசில்தார் பாலசந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுந்தரம்மாள் பெருமாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பி.ரவீந்திரன், எஸ்.ஜி.சி.பெருமாள், ஒன்றியகுழு உறுப்பினர் சங்கீதா கதிரவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பவானி வடிவேலு (சயனபுரம்), சேகர் (அசநெல்லிகுப்பம்), ரேணுகாம்பாள் (நெல்வாய்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்