< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு புதிய வகை உணவு வழங்கும் திட்டம்
திருவாரூர்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு புதிய வகை உணவு வழங்கும் திட்டம்

தினத்தந்தி
|
3 Jun 2022 8:53 PM IST

மாணவர்களுக்கு புதிய வகை உணவு வழங்கும் திட்டம்

திருவாரூர்:

திருவாரூர் கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு புதிய வகை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை தாங்கினார். இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாணவர்களுக்கு புதிய வகை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் அவர் கூறுகையில்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகள் கல்வி திறனை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி பள்ளி-கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த உணவு வகைகளில் மாற்றம் செய்து, மாணவர்களுக்கு புதிய வகை உணவு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதிய வகை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்படுகிறது என்றார். இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன், திருவாரூர் நகரசபை உறுப்பினர் பிரகாஷ், தாசில்தார் நக்கீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்