கரூர்
திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
|திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 15-வது நிதி குழு திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், மனை பிரிவுகளில் அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில் உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.
பயன்பாடு இல்லாத கல்குவாரிகளை வேலி அமைத்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் தொடங்கப்படாத பணிகளை 31-ந்தேதிக்குள் தொடங்கிட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் நடைமுறை வருவதற்கு முன்பாகவே பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.