< Back
மாநில செய்திகள்
கிளாம்பாக்கத்தில் ஆகாய நடைபாதை அமைக்கும் திட்டம் - அறிவிப்பு வெளியீடு
மாநில செய்திகள்

கிளாம்பாக்கத்தில் ஆகாய நடைபாதை அமைக்கும் திட்டம் - அறிவிப்பு வெளியீடு

தினத்தந்தி
|
14 Jan 2024 8:48 PM IST

ஆகாய நடைபாதைக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்த அறிவிப்பை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார்.

செங்கல்பட்டு,

அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பயணிகளின் வசதிக்காக நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீட்டர் நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

இதையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தை இணைக்கும் இந்த ஆகாய நடைபாதையை அமைப்பதற்கு நில எடுப்பு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆயிரத்து 900 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்துவது குறித்த அறிவிப்பை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார்.




மேலும் செய்திகள்