< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு
|6 Sept 2022 10:44 PM IST
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியம் பெரிய கொள்ளியூர், வாணாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, 15-வது நிதிக்குழு திட்டப்பணிகள், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள், ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிகள், திறந்தவெளி கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குனர் மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன், ஒன்றிய பொறியாளர்கள் கோமதி, திருமணிகண்டன், சாமிதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், பணி மேற்பார்வையாளர் புவனா ஆகியோர் உடன் இருந்தனர்.