கள்ளக்குறிச்சி
வளர்ச்சி திட்டப்பணிகளை திட்ட இயக்குனா் ஆய்வு
|சின்னசேலம் அருகே வளர்ச்சி திட்டப்பணிகளை திட்ட இயக்குனா் ஆய்வு மேற்கொண்டார்.
சின்னசேலம்,
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 27 கான்கிரீட் வீடுகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் கொட்டகையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் நல்லதரமுடன் செய்யப்பட்டுள்ளதா? என்று அவர் சரிபார்த்தார். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், வகுப்பறை கட்டிடங்களின் தன்மை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, வேங்கட சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், ஜெயசீலன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் சித்ரா, ராஜசேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமதி, ஆறுமுகம், ஊராட்சி செயலாளர் தீபா மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக ராயர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டு அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்தார்.