< Back
மாநில செய்திகள்
மேம்பாலங்கள் கட்டும் பணியை திட்ட இயக்குனர் ஆய்வு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மேம்பாலங்கள் கட்டும் பணியை திட்ட இயக்குனர் ஆய்வு

தினத்தந்தி
|
29 Sept 2022 12:15 AM IST

கல்வராயன்மலை பகுதியில் மேம்பாலங்கள் கட்டும் பணியை திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலையில் உள்ள மோட்டாம்பட்டி-பாச்சேரி செல்லும் சாலையில் மணிமுக்தாற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 96 லட்சம் செலவில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குனர் மணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாலம் கட்டும் பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும். இதில் தவறு ஏதும் நடைபெறக்கூடாது. மேலும் குறித்த நேரத்துக்குள் பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது செயற்பொறியாளர் செல்வகுமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, உதவி பொறியாளர்கள் அருண்ராஜா, ராஜகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து பாச்சேரி, மோட்டாம்பட்டி, பாலப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டும் பணியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்