நீலகிரி
மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும்
|மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
ஊட்டி
மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் கலந்துகொள்ள ஊட்டிக்கு வந்த பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களை சந்தித்து மத்திய அரசு திட்டங்கள் குறித்து விளக்கப்படும். 11 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,450 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன. தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை திசை திருப்ப மத்திய அரசு மீது பழி போடுகிறது. முதல்-அமைச்சர் பேசியது மிரட்டும் வகையில் உள்ளது. செந்தில்பாலாஜி மீதான வழக்கு, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் நடந்துள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சுமூகமாக உள்ளது. அண்ணாமலை மூத்த நிர்வாகிகளின் கருத்தை கேட்டு தான் முடிவுகளை எடுக்கிறார். நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து பா.ஜ.க. ஆலோசிக்கும். தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இதற்கு நடிகர் விஜய் விதிவிலக்கல்ல. ெசன்னையில் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி வருவதை யாரும் தடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.