< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை... அடிப்படை உரிமைகள் மீது தாக்குதல் - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
மாநில செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை... அடிப்படை உரிமைகள் மீது தாக்குதல் - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

தினத்தந்தி
|
16 July 2022 4:38 AM IST

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கும் உத்தரவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை,

அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். இந்தநிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டம், மத நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் பட்டியல் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், அடுத்த அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கும் உத்தரவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் எவ்வித போராட்டமும் நடத்தகூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது, அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் மீதான நேரடித்தாக்குதல் என்றும் ஜனநாயக்கத்தின் குரல் வளை நெரிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்