< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார்
|29 Jun 2024 7:38 AM IST
விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மதுவிலக்கு திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
சென்னை,
தமிழக சட்டசபையில் மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட உள்ளன.
போதைப் பொருள் விற்பனைகளுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையானதாகவும் இல்லை. தண்டனையைக் கடுமையாக்கி குற்றங்களை முற்றிலும் தடுக்க, முதற்கட்டமாகத் 'தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937'-ல் திருத்த மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மதுவிலக்கு திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.