திருநெல்வேலி
முற்போக்கு எழுத்தாளர் சங்க கலை விழா
|விக்கிரமசிங்கபுரத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்க கலை விழா நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலை விழா நடைபெற்றது. மூன்று விளக்கு திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சுப்புராஜ் தலைமை தாங்கினார். ரவீந்திரன் முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட செயலர் நாறும்பூநாதன் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் வழக்காடு மன்றம், நாடக இயக்குனர் மதியழகன் குழுவினரின் நாடகம், கரிசல் குயில் கிருஷ்ணசாமி, தண்டபாணி, உமா மற்றும் மேட்டூர் வசந்தி குழுவினரின் இசைப்பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விக்கிரமசிங்கபுரம் வட்டார பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் த.மு.எ.க.ச. துணைத் தலைவர் ரோகினி, பொதுச்செயலர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகரச் செயலர் இசக்கிராஜன், த.மு.எ.க. சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். த.மு.எ.க.ச. நகரத் தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். செயலர் சங்கர் நன்றி கூறினார்.