தென்காசி
கிராம பஞ்சாயத்துகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி
|குருவிகுளம் யூனியன் அலுவலகத்தில் கிராம பஞ்சாயத்துகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவேங்கடம்:
குருவிகுளம் யூனியன் அலுவலகத்தில் கிராம பஞ்சாயத்துகளுக்கு குப்பைகள் சேகரிக்கும் மினி பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட தெற்கு குருவிகுளம், காரிசாத்தான், நக்கலமுத்தன்பட்டி உள்ளிட்ட 31 பஞ்சாயத்துகளுக்கு குப்பைகள் சேகரிக்க மினி பேட்டரி வாகனங்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கி பேசினார்.
இதில் மாவட்ட கவுன்சிலர்கள் தேவிராஜகோபால், சுதாபிரபாகரன், ஓவர்சீயர் பாலுச்சாமி, ம.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, கிறிஸ்டோபர், நெசவாளர் அணி குமார்சங்கர், நக்கலமுத்தன்பட்டி பஞ்சாயத்து தலைவர் குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அழகை கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.