< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம் சங்கரமடத்தில் 48 நாட்கள் வேத பாராயணம் நிகழ்ச்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரம் சங்கரமடத்தில் 48 நாட்கள் வேத பாராயணம் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
11 Nov 2022 3:36 PM GMT

ராமேசுவரம் சங்கரமடத்தில் 48 நாட்கள் வேத பாராயணம் நிகழ்ச்சி நடக்கிறது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் அருகே உள்ள காஞ்சி காமகோடி சங்கரமடத்தில் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் உலக நன்மை, அமைதிக்காக மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக கிருத்திகா மண்டல வேதபாராயணம் நிகழ்ச்சி வருகிற 17-ந் தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெற உள்ளது. குறிப்பாக கார்த்திகை மாதம் பிறந்ததில் இருந்து 48 நாட்கள் வேத விற்பனர்கள் கலந்து கொள்ளும் இந்த வேத பாராயணம் நிகழ்ச்சி நடத்தப்படுவதன் மூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாவங்கள் நீங்கி நன்மைகள் கிடைக்கப்பெறும் என்று நம்பப்படுகின்றது. அதனால் வருகிற 17-ந் தேதி முதல் 48 நாட்கள் சங்கர மடத்தில் நடைபெறும் வேதபாராயண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் காணிக்கையை சங்கரமடத்தில் நேரடியாகவோ அல்லது வங்கி கணக்கு மூலமாகவோ செலுத்தி கலந்துகொள்ளலாம். வருகிற 16-ந் தேதி அஷ்டமி அன்று சங்கரமடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்னதானமும் நடைபெறுகிறது.இந்த தகவலை சங்கரமடத்தின் மேலாளர் ஆடிட்டர் சுந்தரம் தெரிவித்துள்ளார். ராமேசுவரம் சங்கரமடம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையும் இணைந்து சங்கர மடத்தில் இலவச பொது மற்றும் கண் மருத்துவமனை முகாம் வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமை நகர சபை சேர்மன் நாசர் கான் தொடங்கி வைக்கிறார்.

மேலும் செய்திகள்