< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமக்கல் அரசு பெண்கள் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
|21 Oct 2022 12:15 AM IST
நாமக்கல் அரசு பெண்கள் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பில் தீ விபத்து இல்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாட அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதேபோல் எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி மாவட்ட அலுவலர் தவமணி கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.