< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்தார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|19 Dec 2022 11:13 AM IST
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாக கல்வெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் இல்லத்தில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்து அன்பழகன் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின், நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் அன்பழகனின் நூற்றாண்டு வளைவு மற்றம் அன்பழகன் கல்வி வளாக கல்வெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.