கள்ளக்குறிச்சி
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா
|கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா உதயசூரியன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல்.ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் அன்பழகனின் உருவ படத்துக்கு உதயசூரியன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் ஆவின் தலைவர் என்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், அன்புமணிமாறன், சங்கராபுரம் நகர செயலாளர் துரை.தாகப்பிள்ளை, வடக்கனந்தல் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், சங்கராபுரம் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், சின்னசேலம் நகர செயலாளர் செந்தில், கள்ளக்குறிச்சி ஒன்றிய அவைத்தலைவர் ரவிக்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தாகப்பிள்ளை, மகளிர் அணி நிர்வாகி அருள்மொழி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அருள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கொண்டனர்.