< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
அரியலூர்
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

தினத்தந்தி
|
28 Aug 2022 5:44 PM GMT

ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார வள மையம் சார்பில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தா.பழூர் வட்டாரத்துக்குட்பட்ட தா.பழூர், காரைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், விக்கிரமங்கலம், சுத்தமல்லி, வெண்மான்கொண்டான், நாயகனைப்பிரியாள், கோடாலிகருப்பூர் ஆகிய குறுவள மையங்களில் ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 212 ஆசிரியர்களுக்கும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 189 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா, வட்டார கல்வி அலுவலர்கள் அசோகன், சாந்திராணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆசிரியர் பயிற்றுனர்களுடன் கருத்தாளர்கள் இணைந்து பயிற்சி அளித்தனர்.

மேலும் செய்திகள்