< Back
மாநில செய்திகள்
பள்ளி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

பள்ளி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

தினத்தந்தி
|
19 Jun 2023 6:45 PM GMT

மாணவர்களின் உடல்நலன், மனநலம் பேணுவது குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

காளையார்கோவில்

மாணவர்களின் உடல்நலன், மனநலம் பேணுவது குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், கொல்லங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கு ஆகிய இடங்களில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் சகாய செல்வன், ஜேம்ஸ், ஆலீஸ்மேரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் ஆகியோர் பார்வையிட்டனர். நல்வாழ்வு குறித்து டாக்டர் தென்றல் ஆலோசனைகள் வழங்கினார்.

மாணவர்களின் உடல்நலன்

பயிற்சியில் மாணவர்களுக்கு உடல் நலம், மனநலம், மன்ற செயல்பாடுகள் மற்றும் கலையரங்கம் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும் மாணவர்களுக்கு நோய்கள் குறித்த விழிப்புணர்வு, கண் பார்வை குறைபாடு, முன் கழுத்துக்கழலை நோய், காசநோய், ஆட்டிசம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுத்தும் அறிகுறிகள் குறித்தும், வளர் இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், தன்சுத்தம், சுகாதாரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில் ஆரோக்கியசாமி, பாண்டி, ராமநாதன், டேவிட், சகாயமேரி, கலைவாணி, ராஜசேகரன், பிரான்சிஸ் அருள்செல்வம், ஜெயமுருகன், ஜோசப் செங்கோல், செல்வகுமார், ராஜா, முருகானந்தம், செல்லக்குமார், லதா, லெட்சுமி, கதாம்பரி, பாண்டியன் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் வனிதா, பாண்டி, முகமது காசீம், குடியரசி, மார்கரேட், செல்வராணி, சண்முகபிரியா, சிவசங்கரி, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்