பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
|பேராசிரியர் அன்பழகனின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் கடந்த 2020 ஆண்டு மார்ச் 7-ம் தேதி காலமானார். அவரது 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பேராசிரியர் அன்பழகனின் உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
குலையா உறுதி, அசையாக் கொள்கை, தாழா மானம், மங்கா உணர்வு, மாறா நட்பு, மறையாப் புகழ் என இனி வரும் இயக்கத்து இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் நினைவுநாள். கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக்குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.