< Back
மாநில செய்திகள்
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி
மாநில செய்திகள்

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
25 April 2024 4:10 PM IST

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சென்னை,

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டில் நகைகள் திருடு போனது தொடர்பாக கடந்த 14-ம் தேதி மாம்பலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நகை திருட்டு குறித்து அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண் லெட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நான் நகைகளை திருடவில்லை என லெட்சுமி கூறியதாகவும், விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் எழுதி வாங்கி கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்தது குறித்து மன உளைச்சலில் இருந்த பணிப்பெண் லெட்சுமி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர், பணிப்பெண்ணை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்