< Back
மாநில செய்திகள்
போக்சோ வழக்குகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை
மாநில செய்திகள்

போக்சோ வழக்குகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை

தினத்தந்தி
|
10 Sept 2022 2:14 AM IST

போக்சோ வழக்குகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை,

போக்சோ சட்ட வழக்குகளில், போலீசார் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, போலீசாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகம் அனைத்து போலீசாருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், போக்சோ சட்ட வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை, நீதிமன்றத்திற்கு அனுப்பிய பின்பு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்க்கும் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறார்களிடம் நடத்தப்படும் விசாரணைகளை வீடியோவாக பதிவு செய்யக்கூடாது என்றும், கோர்ட்டு ஆணை அல்லது விசாரணை அதிகாரி முக்கியம் என கருதினால் மட்டுமே, காவல் துறையை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவருடைய குடும்பத்தாரிடம் இடைக்கால நிவாரணத்தை கோர்ட்டை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும், இவை அனைத்தையும் பின்பற்றப்படாவில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்