< Back
மாநில செய்திகள்
பேச்சு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்
சிவகங்கை
மாநில செய்திகள்

பேச்சு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்

தினத்தந்தி
|
21 Sept 2023 12:30 AM IST

பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.


தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. அண்ணா பிறந்த நாளையொட்டி நடந்த போட்டியில் அமராவதிபுதூர் ராசராசன் கல்வியியல் கல்லூரி மாணவர் நவீன் லூர்துராஜ் முதல் பரிசையும், சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி மஸ்லினா 2-வது பரிசையும், புதுவயல் வித்யாகிரி கலை, அறிவியல் கல்லூரி மாணவர் முகமதுகைப் 3-ம் பரிசையும் பெற்றனர்.

பெரியார் பிறந்த நாளையொட்டி நடந்த போட்டியில் காரைக்குடி, டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி மாணவி ஜோஷி அபர்ணா முதல் பரிசையும், அமராவதிபுதூர் ராசராசன் கல்வியியல் கல்லூரி மாணவர் நவீன் லூர்துராஜ் 2-வது பரிசையும், சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரி மாணவி தரணியா 3-ம் பரிசையும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் நாகராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்