< Back
மாநில செய்திகள்
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
தென்காசி
மாநில செய்திகள்

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
22 Jun 2023 12:30 AM IST

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அம்மன் பிளவர்ஸ் கபடி குழு சார்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. கோவில் நிர்வாக குழு தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஊர்களை சேர்ந்த கபடி அணியினர் கலந்து கொண்டனர்.

இறுதிப்போட்டியினை ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

இதில் குருவன்கோட்டை அம்மன் பிளவர்ஸ் அணி முதல் பரிசான 20 ஆயிரம் ரூபாயினையும் கோப்பையையும் கைப்பற்றியது. 2-வது இடம் பிடித்த லட்சுமிபுரம் வி.ஆர்.என். அணியினர் 17 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. கல்லூத்து வெண்புறா அணி ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையினை கைப்பற்றி 3-வது பரிசை பெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை செயலாளர் ஆலடி எழில்வாணன், மதுரை நாடார் சங்க தலைவர் வெங்கடேஷ் ராஜா, தொழிலதிபர் மணிகண்டன், தென்காசி மாவட்ட அமெச்சூர் கபடி கழக இணை செயலாளர்கள் அலெக்சாண்டர் தங்கம், ஹரிஹரசுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் செய்திகள்