< Back
மாநில செய்திகள்
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
26 July 2023 12:32 AM IST

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தில் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை அம்மாசத்திரம் அணியும், 2-வது பரிசை பசுமலைப்பட்டி அணியும், 3-வது பரிசை கொத்தமங்கலம் அணியும், 4-வது பரிசை உடையாண்பட்டி அணியும், 5-வது பரிசை மோசக்குடி அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் ரொக்கம், கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை அன்னவாசல் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அம்மாசத்திரம் இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்