நாகப்பட்டினம்
உலக விண்வெளி வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|உலக விண்வெளி வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனம் மற்றும் இஸ்ரோ சார்பில் உலக விண்வெளி வார விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் நாகை, மயிலாடுதுறை , திருவாரூர், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டு விண்வெளியில் ஆய்வுகள் குறித்த கருத்தரங்கத்தை நடத்தினர். இதனையடுத்து விண்வெளி கண்காட்சி நடந்தது. இதையொட்டி விண்வெளி ஆய்வு குறித்த பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி இணை செயலாளர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். இடைநிலைக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சால்யா கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் சுந்தரவடிவேல், நிர்வாக தலைவர் மணிகண்ட குமரன், கல்வி சார் இயக்குனர் மோகன், வங்கி மேலாளர்கள், அனைத்து கல்லூரி முதல்வர்கள், துணைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர் சேர்க்கை பிரிவு தலைவர் ஹரிநாராயணன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் ஜிம் ஹாக்கின்சன் நன்றி கூறினார்.