< Back
மாநில செய்திகள்
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
தேனி
மாநில செய்திகள்

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

தினத்தந்தி
|
3 Feb 2023 12:15 AM IST

உலக ஈரநில தினத்தையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வனத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட வனத்துறை சார்பில், உலக ஈரநில தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் விழிப்புணர்வு வாசகம் எழுதுதல், ஓவியம், கட்டுரை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 1 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 4 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் வெற்றி பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களுடன் மரக்கன்றுகளை மாவட்ட வன அலுவலர் சமர்த்தா வழங்கினார். விழாவில் உதவி வனப்பாதுகாவலர் ஷர்மிலி, வனச்சரக அலுவலர்கள், அருள்குமார், சம்பத், மைனா மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் தாமரைக்குளம் கண்மாயில் மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தலைமையில் தூய்மைப் பணி நடந்தது. அதில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்