விருதுநகர்
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தின விழா நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. அப்போது மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடைெபற்றன. இதில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் முத்துலட்சுமி வரவேற்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் சூர்யா, சிவரஞ்சனி, மகாலட்சுமி, சிவகாமி, கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் தன்னார்வலர் லாவண்யாதேவி நன்றி கூறினார்.