< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|18 March 2023 12:15 AM IST
அம்மங்காவு அரசு பள்ளியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பந்தலூர்,
பந்தலூர் அருகே அம்மங்காவு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கீதா சரஸ்வதி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி ஆசிரியர் பாக்கியராஜ், நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜயலட்சுமி, பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.