செங்கல்பட்டு
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் நிறுவன தலைவர் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் மூலம் பங்காரு அடிகளார் 83-ஆம் ஆண்டு அவதார திருநாள். தேசியகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாள் விழா, சுவாமி விவேகானந்தரின் 160-வது பிறந்தநாள் வழா, கிறிஸ்துமஸ், புத்தண்டு மற்றும் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடந்தது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி விளையாட்டு திடலில் நடந்த விளையாட்டு போட்டியில் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் நிறுவன தலைவர் கோ.ப. அன்பழகன் தலைமை தாங்கினார். மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வக்கீல் அகத்தியன் விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் நிறுவன தலைவர் கோ.ப. அன்பழகன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இரு பாலருக்கும். 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர், ஓட்டம், தொடர் ஓட்டம், 5 மீட்டர், நடை ஓட்டம் குண்டு எறிதல் மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயக்கத்தின் 2-ம் நிலைதலைவர்கள், லிங்கநாதன், சக்தி கோபிநாத், சிவகுமார். அருள்ஜோதி, சரளா, மதுரை மாவட்ட ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தொண்டர்கள் செய்திருந்தனர்.