திருநெல்வேலி
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை:
தேசிய மாஸ்டர்ஸ் விளையாட்டுபோட்டி 2023-க்கான வீரர்கள் தேர்வு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் இறகுபந்து, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஆக்கி, கபடி, பவர் லிப்டிங், நீச்சல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தனி தாசில்தார் செல்வகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற வீரர்கள் ஐதராபாத்தில் நடக்கும் 5-வது தேசிய மாஸ்டர்ஸ் விளையாட்டுபோட்டியில் கலந்து கொள்வார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாஸ்டர்ஸ் அசோசியேஷன் ஆப் ஸ்போர்ட்ஸ் பொதுச்செயலாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் செய்து இருந்தனர்.