< Back
மாநில செய்திகள்
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
தென்காசி
மாநில செய்திகள்

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
19 Aug 2023 12:15 AM IST

வாசுதேவநல்லூரில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வாசுதேவநல்லூர்:

சங்கரன்கோவில் ஏ.வெங்கடேஷ் குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் ஏ.வி.கே. கல்வி குழும வளாகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியின் 13-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. கல்வி குழும தலைவர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், கபடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி, பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரிய-ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்