< Back
மாநில செய்திகள்
பேச்சு,ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருவாரூர்
மாநில செய்திகள்

பேச்சு,ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
4 Aug 2022 11:37 PM IST

பேச்சு,ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

நீடாமங்கலம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 75-வது சுதந்திர திருநாளை சிறப்பிக்கும் வகையில் சுதந்திரதின அமுதப்பெருவிழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி பேசினார். தொடர்ந்து இந்த பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றும் வகையில் பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. அரிச்சந்திரபுரம் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் செல்வம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பழனிவேல் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகசபை ஆகியோர் கலந்துகொண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். முன்னதாக திட்ட உதவியாளர் ரேகா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்