சிவகங்கை
கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
இளையான்குடி
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. முன்னாள் கால்பந்து வீரர் நைனா முகம்மது, கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், கல்வியியல் கல்லூரி முதல்வர் முகம்மது முஸ்தபா ஆகியோர் ேபாட்டியை தொடங்கி வைத்தனர். 12 அணிகள் பங்கு பெற்றதில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முன்னாள் மாணவர் அணி முதல் பரிசும், காரைக்குடி வித்யகிரி கல்லூரி அணி 2-ம் இடமும், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர்கள் அணி 3-ம் இடமும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரி அணி 4-ம் இடமும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் வரவேற்றுப் பேசினார். சுயநிதி பாட பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ்கான் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் சிறந்த கால்பந்து வீரர் கமருதீன், சேது பொறியியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி ஆட்சி குழு உறுப்பினர் அப்துல் சலீம், கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், கல்வியியல் கல்லூரி முதல்வர் முகம்மது முஸ்தபா ஆகியோர் பரிசு வழங்கினர். தமிழ் துறை உதவி பேராசிரியர் அப்துல் ரஹீம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காஜா நஜிமுதீன் உள்ளிட்ட உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.