< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
கட்டுரை, கவிதை-ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|13 Feb 2023 12:15 AM IST
கட்டுரை, கவிதை-ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வேதாரண்யம் ராஜாஜீ பூங்காவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நாகை மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். மகளிர் சமுதாய அமைப்பாளர் செல்லம்மாள் வரவேற்றார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நகரமன்ற தலைவர் புகழேந்தி பரிசுகளை வழங்கினர்.