< Back
மாநில செய்திகள்
கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

கண்ணமங்கலம் அரசு பள்ளியில் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா, உலக மகளிர் தினம், தேசிய கண்டுபிடிப்பு தினம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் பத்மஜா தலைமை தாங்கினார். கண்ணமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் குமார், ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சென்னகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சுபலட்சுமி வரவேற்றார்.

விழாவில் சென்னை மத்திய தொழில் ஆராய்ச்சி மைய திட்ட இயக்குனர் யுவஸ்ரீ கலந்து கொண்டு டாக்டர் அப்துல் கலாம் குறித்து நடந்த நடந்த கட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்ற கண்ணமங்கலம் பள்ளி மாணவன் கமலேஷ்க்கு ரொக்கப் பரிசு ரூ.11 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற ஒண்ணுபுரம் பள்ளி மாணவி தனுரூயாவுக்கு ரொக்கப் பரிசு ரூ.8 ஆயிரமும், மூன்றாமிடம் பெற்ற மாணவி ஸ்ரீநிதிக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கினார்.

இதில் உதவி தலைமை ஆசிரியர் தசக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் பச்சியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Related Tags :
மேலும் செய்திகள்