< Back
மாநில செய்திகள்
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
விருதுநகர்
மாநில செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
27 July 2022 12:44 AM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

பல்வேறு போட்டி

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், முதியோர் என பல்வேறு தரப்பினருக்கும் செஸ் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் வெற்றி பெற்ற 200-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், தங்கப்பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒலிம்பியாட் ஜோதி

கலெக்டர் மேகநாத ரெட்டி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக விருதுநகர் மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஜோதி ஊர்வலத்தை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட அலுவலர் திலகவதி, சிவகாசி சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், கோட்டாட்சியர்கள் கல்யாண் குமார், அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்