விருதுநகர்
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|காரியாட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
காரியாபட்டி,
மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் எனது குப்பை, எனது பொறுப்பு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், துணைத்தலைவர் மிக்கேலம்மாள் ஆகியோர் வழங்கினர். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி சுவற்றில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சப்பை பயன்படுத்துவது பற்றிய ஓவியம் வரைந்தனர். இதை பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், துணைத்தலைவர் மிக்கேலம்மாள், செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில் கவுன்சிலர்கள் கருப்பையா, அனிதா, செல்லம்மாள், செல்வராஜ், மல்லாங்கிணறு பள்ளி தலைமையாசிரியர் பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.