திருவண்ணாமலை
கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
|கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தண்டராம்பட்டு
கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தண்டராம்பட்டு ஒன்றியத்தில், கலைத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா தண்டராம்பட்டில் நடைபெற்றது. செங்கம் மு.பெ.கிரி எம்எல்ஏ தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
விழாவில் தண்டராம்பட்டு ஒன்றியக் குழு தலைவர் பரிமளாகலையரசன், மாவட்ட கல்வி அலுவலர் சி.ப.கார்த்திகேயன், செங்கம் ஒன்றிய செயலாளர் த.செந்தில்குமார், ஒன்றிய துணை செயலாளர் எல்.ஐ.சி. வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கார்த்தி வரவேற்றார். முடிவில் வே.சாரங்கபாணி நன்றி கூறினார்.