< Back
மாநில செய்திகள்
கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
14 July 2022 10:46 PM IST

மாவட்ட அளவில் நடைபெற்ற கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், கருவி இசை, கிராமிய நடனம், ஓவியம் ஆகிய கலை போட்டிகள் உளுந்தூர்பேட்டை களமருதூர் அருணா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 38 பேர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்துகொண்டு ஒவ்வொரு கலைப்பிரிவுக்கும் முதல் பரிசு ரூ.6 ஆயிரம், 2-வது பரிசு ரூ.4,500, 3-வது பரிசு ரூ.3,500 என 5 பிரிவுகளிலும் 15 பேருக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் நீலமேகன், கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ்ச்சங்க தலைவர் முருககுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்