நாகப்பட்டினம்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாகை மாவட்ட சதுரங்க கழகமும், ஆயக்காரன்புலம் பி.ஆர்.ஜி.காமராஜ் அறக்கட்டளை, வாய்மேடு சதுரங்க கழகம் இணைந்து மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் நகர் மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் முன்னிலை வகித்தார். போட்டியில் 308 மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், பதக்கங்களையும் நகர் மன்ற தலைவர் வழங்கினார். இதில் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சுந்தர்ராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமையன், நெல்சன் யாசர் பிரபு, ஆசிரியர்கள் வைத்தியநாதன், மணிமொழி, சுப்பிரமணியன், அன்புமணி, பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.மு.க.வை சேர்ந்த விக்னேஷ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ் காமராஜ் செய்திருந்தார்.