< Back
மாநில செய்திகள்
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கரூர்
மாநில செய்திகள்

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
13 Jun 2023 12:35 AM IST

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

க.பரமத்தி ஒன்றியம், பவுத்திரம் ஊராட்சி, சாலப்பாளையம் ஜெயந்தி நகரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், முதல் பரிசை மங்களா மேடு அணியும், 2-வது பரிசை சாலப்பாளையம் 7 பிரதர்ஸ் அணியும், 3-வது பரிசை வரப்பாளையம் அணியும், 4-வது பரிசை வடுகபட்டி அணியும் பெற்றது. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ கலந்து கொண்டு பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். இதில் கபடி ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்