< Back
மாநில செய்திகள்
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
1 Jun 2022 12:12 AM IST

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அரிமளம்:

அரிமளம் ஒன்றியம், கல்லுக்குடியிருப்பு கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு முனீஸ்வரா கபடி குழுவினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறுவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடி போட்டியில் 50 கிலோ எடை பிரிவினர் கலந்து கொண்டு விளையாடினார்கள். கபடி போட்டியில் மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. கபடி போட்டியில் முதல் பரிசு ரூ.7 ஆயிரத்து 347-ஐ நெடுங்குடி அருகே கைலாசபுரம் சந்துரு நினைவு கபடி குழுவினரும், 2-ம் பரிசு ரூ.6 ஆயிரத்து 347-ஐ மூக்குடி மச்சுபாண்டி அணியினரும், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரத்து 347-ஐ தஞ்சாவூர் மாவட்டம் ஆண்டாகோட்டை அணியினரும், 4-ம் பரிசு ரூ.4 ஆயிரத்து 347-ஐ சிவகங்கை மாவட்டம் வடச்சேரிபட்டி அணியினரும் பெற்றனர். பின்னர் வெற்றிபெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்த கபடி போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர்.

மேலும் செய்திகள்