< Back
தமிழக செய்திகள்
பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சிவகங்கை
தமிழக செய்திகள்

பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
27 Jan 2023 12:24 AM IST

பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட நீதிபதி பரிசு வழங்கினார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய்பிரியா தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் குழந்தைகள் உரிமைகள் எதிர்காலத்தை உறுதியாக்கும் பாதுகாப்பு சட்டம் குறித்து காரைக்குடி அரசு சட்ட கல்லூரி மற்றும் பிரீஸ்ட் பல்கலைக்கழக சட்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார்

விழாவில் மாவட்ட கூடுதல் நீதிபதி .சத்தியதாரா, போக்ேசா நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீதிபதி. சுந்தரராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஆப்ரின் பேகம், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்