விருதுநகர்
வாசிப்பு திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|வாசிப்பு திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் நடந்த வாசிப்புத்திறன் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியலிங்கபுரம் 4-ம் வகுப்பு மாணவன் சிவ மகேஸ்வரன், வெம்பக்கோட்டை நதிகுடி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி நல்லம்மா, ஏழாயிரம்பண்ணை ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் குமரன் ஆகிய 3 பேரையும் கலெக்டர் மேகநாதரெட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களது சாதனையை பாராட்டி புத்தகம் வழங்கினார். மேலும் தனது சொந்த செலவில் மாணவி நல்லம்மாவுக்கு ரூ.4 ஆயிரமும், மாணவர்கள் சிவ மகேஸ்வரன் மற்றும் குமரனுக்கு தலா ரூ. 2,500-ம் கல்வி உதவித்தொகையாக வழங்கினார். மேலும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கெங்காராஜ், தன்னார்வலர்கள் சீதாலட்சுமி, மாலதி, பூங்கொடி ஆகியோருக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின்போது உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் உடனிருந்தார்.