< Back
மாநில செய்திகள்
ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்
ஈரோடு
மாநில செய்திகள்

ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்

தினத்தந்தி
|
30 Sept 2023 2:37 PM IST

ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.

ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசு வழங்கினார்.

காப்பீட்டு அட்டைகள்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் இணைந்து செயல்படுத்தப்பட்டு, 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் முதல்-அமைச்சரின் காப்பீட்டு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, 10 பேருக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளை வழங்கினார்.

மாணவிகளுக்கு பரிசு

மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 2 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனடைந்த 5 பேருக்கு நினைவுப்பரிசுகளையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 10 காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்களையும் மற்றும் திட்ட விழிப்புணர்வு தொடர்பாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாவட்ட அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்