விருதுநகர்
ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார்.
ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார்.
ஓவியப்போட்டி
சுதந்திர தின விழாவினை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தேசத்தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்டத்தின் நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையிலும், மாணவர்களுக்கு அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பாக விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டிநடந்தது.
இதில் மாவட்டத்தில் உள்ள 27 பள்ளிகளில் இருந்து 75 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹர்சனா முதல் பரிசினை பெற்றார்.
மாணவர்களுக்கு பரிசு
2-வது பரிசினை ராஜபாளையம் ஸ்ரீ ராவ் பகதூர் தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சண்முகப்பிரியா பெற்றார். 3-வது பரிசினை நடையனேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி லட்சுமி பிரியா பெற்றார்.
இதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் விருதுநகர் மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் பால்துரை நன்றி கூறினார்.