புதுக்கோட்டை
குறுவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|குறுவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த ஒரு மாதம் நடைபெற்று வந்தது. தொடர்ந்து நிறைவு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மாரிமுத்து தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஒலிம்பிக் கொடியை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் காசிநாதன் ஏற்றினார். கண்ணக்கன்காடு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா ஆகியோர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ், ஆலங்குடி ஜெ.குரூப்ஸ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் அந்தோணிராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதைத்ெதாடர்ந்து குண்டு எறிதல், வட்டு எறிதல், கிரிக்கெட், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஆரோக்கிய மேரி நன்றி கூறினார்.