< Back
மாநில செய்திகள்
கோலப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கோலப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
2 Dec 2022 12:15 AM IST

கோலப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தையொட்டி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள்-பெண் குழந்தைகள் உரிமைப்பாதுகாப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடந்து வருகிறது. தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது.அதன்படி நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா, செல்வகுமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, வட்டார ஒருங்கிணைப்பாளர் சத்யகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடந்து கோலப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்